ரூ.7,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

164
ரூ.7,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்
ரூ.7,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

ரூ.7,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

ரூ.7,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸமார்ட்போனின் விலை ரூ.7,000 குறைக்கப்பட்டுள்ளது. #GalaxyS9plus #Smartphone

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்சமயம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் 64 ஜி.பி. வெர்ஷன் விலை ரூ.57,900 ஆக குறைந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.64,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கேலக்ஸி எஸ்9 பிளஸ் 128 ஜி.பி. வெர்ஷன் விலை தற்சமயம் ரூ.61,900 என்றும் 256 ஜி.பி. வெர்ஷன் ரூ.65,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.68,900 மற்றும் ரூ.72,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் புதிய விலையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் அமலாகியிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:
–  6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
– அட்ரினோ 630, மாலி G72M18GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி