18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு உருவாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

220
18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு உருவாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்
18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு உருவாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு உருவாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு உருவாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் நான்கு நாட்களில் அதிகபட்சமாக 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. #EnergizerMobile #MWC 2019

எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மொத்தம் 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்களும் அடங்கும். புதிய மொபைல் போன்கள் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எனெர்ஜைசர் மெபைல் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன்களில் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமராக்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றொரு ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்ச பேட்டரி கொண்டு இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழா நடைபெறும் பார்சிலோனாவில் பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை எனெர்ஜைசர் மொபைல் அரங்கில் மொத்தம் 26 புதிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
புகைப்படம் நன்றி: GSMArena
புதிய ஸ்மார்ட்போன்கள் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல், ஸ்கேனிங் வசதி மற்றும் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என எனெர்ஜைசர் மொபைல் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. புதிய எனெர்ஜைசர் மொபைல்கள் நான்கு வெவ்வேறு சீரிஸ்களில் வெளியாக இருக்கின்றன.
இவை ஹார்டுகேஸ், எனெர்ஜி, பவர் மேக்ஸ் மற்றும் அல்டிமேட் என அழைக்கப்பட இருக்கின்றன. இதில் ஹார்டுகேஸ் சீரிஸ் ரக்கட் ரக ஸ்மார்ட்போன்களாகவும், எனெர்ஜி சீரிஸ் விலை குறைவாகவும், பவர் மேக்ஸ் சீரிஸ் அதிக பேட்டரி திறனும், அல்டிமேட் சீரிஸ் உயர்-ரக ஸ்மார்ட்போன்களாக உருவாகிறது.