கணவர் வீட்டு முன் குழந்தையுடன் பெண் தர்ணா

221
கணவர் வீட்டு முன் குழந்தையுடன் பெண் தர்ணா
கணவர் வீட்டு முன் குழந்தையுடன் பெண் தர்ணா

கணவர் வீட்டு முன் குழந்தையுடன் பெண் தர்ணா

கணவர் வீட்டு முன் குழந்தையுடன் பெண் தர்ணா நொளம்பூரில், கணவருடன் சேர்த்து வைக்க கோரி கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் பவலனன். இவருடைய மகள் பிரணிதிஸ் (வயது 32). இவருக்கும், சென்னை நொளம்பூர் 4-வது பிளாக் சர்ச் தெருவைச் சேர்ந்த ரகுபதி என்பவருடைய மகன் பீனிஸ் (36) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்கள் பிரிந்து இருந்த கணவன்- மனைவி இருவரும், 2016-ல் இருந்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த மே மாதம் பிரணிதிசுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராபர்ட் என பெயர் சூட்டினர். குழந்தை பிறந்தது முதல் தனது தாய் வீட்டில் இருந்து வந்த பிரணிதிஸ், நேற்று காலை தனது 8 மாத கைக்குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்தார்.

மகளை விடுவதற்காக அவருடைய தந்தை பவலனனும் உடன் வந்தார். ஆனால் அவருடைய கணவர் பீனிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறி பிரணிதிசை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரணிதிஸ், தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தனது 8 மாத கைக்குழந்தையுடன், கணவர் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த நொளம்பூர் போலீசார், இருவீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. பிரணிதிசை வீட்டில் சேர்க்க அவரது கணவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட பிரணிதிசை நொளம்பூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.