ஐ.சி.சி.யின் புதிய தர வரிசை பட்டியல்; இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்

141
ஐ.சி.சி.யின் புதிய தர வரிசை பட்டியல்; இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்
ஐ.சி.சி.யின் புதிய தர வரிசை பட்டியல்; இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி.யின் புதிய தர வரிசை பட்டியல்; இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி.யின் புதிய தர வரிசை பட்டியல்; இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடியது.  இந்த இரு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.  இதில் சமீபத்திய வெற்றியால் 122 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.  இங்கிலாந்து (126 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்புடன் விளையாடி தொடர் நாயகன் விருது வென்ற மகேந்திர சிங் தோனி பேட்டிங் தரவரிசை பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி 17வது இடத்திற்கு வந்துள்ளார்.  கேதர் ஜாதவ் 8 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 35வது இடத்தில் உள்ளார்.
இதேபோன்று, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பந்து வீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.  சுழற்பந்து வீச்சாளர் யஜ்வேந்திர சஹல் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்திலும் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 6 இடங்கள் முன்னேறி 17வது இடத்திலும் உள்ளனர்.